Paristamil Navigation Paristamil advert login

கணித ஆசிரியருக்கு கொலை மிரட்டல்! - மாணவன் கைது!!

கணித ஆசிரியருக்கு கொலை மிரட்டல்! - மாணவன் கைது!!

17 மார்கழி 2023 ஞாயிறு 18:03 | பார்வைகள் : 7340


கணித ஆசிரியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுள்ளது. அவரிடம் பயிலும் மாணவன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Chesnay-Rocquencourt (Yvelines) நகரில் உள்ள Blanche de Castille எனும் கிறிஸ்தவ பாடசாலையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவருக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமூகவலைத்தளமான Instagram இல், குறித்த ஆசிரியரின் புகைப்படத்தை பதிவேற்றி, ஆங்கிலத்தில் சில தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி, ‘இவரை ஒருவருக்கும் பிடிக்கவில்லை. இவரை நான் தாக்குதல் நடத்தி கொல்லப்போகிறேன்!’ எனவும் பகிரப்படுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து, இது தொடர்பாக குறித்த ஆசிரியர் காவல்துறையினரிடம் புகார் அளிக்க, விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், மாணவன் ஒருவரைக் கைது செய்தனர். 

குறித்த மாணவரே மேற்படி செயலில் ஈடுபட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்