⚠ இன்று RER B சேவைகள் பாதிப்பு!!
18 மார்கழி 2023 திங்கள் 06:00 | பார்வைகள் : 3673
இன்று திங்கட்கிழமை RER B சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. வேலை நிறுத்தம் காரணமாக சேவை பாதிகாக மட்டுப்படுத்தப்படுகிறது.
La base, CGT ம்ற்றும் FO ஆகிய தொழிற்சங்க ஊழியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். RER சாரதி ஒருவர் மீது ஒழுக்காற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மிகவும் அப்பட்டமான அநீதி எனவும் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு நீதி கேட்டு இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர்.
அதையடுத்து, RER B சேவைகள் இரண்டில் ஒன்று மட்டுமே இயங்கும் என RATP அறிவித்துள்ளது.
அதேவேளை, Gare du Nord நிலையத்தின் உள்ளக இணைப்பு சேவை (Interconnexion ) தடையின்றி இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்குள் RER B சேவையில் நாள் ஒன்றில் ஒரு மில்லியன் பயணிகள் பயணிக்கிறமை குறிப்பிடத்தக்கது.