ஆறுகள் இணைப்பு திட்ட சோதனை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
18 மார்கழி 2023 திங்கள் 10:15 | பார்வைகள் : 2188
தாமிரபரணி உபரி நீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தாமிரபரணி உபரி நீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் முதல்வர் ஸ்டாலின், '' நதிநீர் இணைப்பு திட்டத்தால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப்பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதி நீர் இணைப்பு திட்ட சோதணை ஓட்டம் மேற்கொள்ள வேண்டும். கன்னடியன் கால்வாயில் வெள்ளப்பெருக்கு நீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.