இஸ்லாமிற்கு எதிராக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சர்ச்சை பேச்சு
18 மார்கழி 2023 திங்கள் 08:33 | பார்வைகள் : 2864
ஐரோப்பாவில் இஸ்லாமிய மதத்துக்கு இடம் இல்லை என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் தீவிர வலதுசாரி கட்சியின் சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு ரோம் நகரில் நடைபெற்ற அரசியல் மாநாட்டை தலைமை தாங்கி நடத்திய இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இஸ்லாம் மதத்தை ஏளனம் செய்யுமாறு பேசியுள்ளார்.
இந்த மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கும் கலந்து கொண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
விழாவில் கலந்து கொண்டு பேசிய இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஐரோப்பாவில் இஸ்லாமிற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்லாம் கலாச்சாரத்திற்கும் ஐரோப்பாவின் கலாச்சாரம் மற்றும் மதிப்புகளுக்கும் இடையே பொருந்தக்கூடிய பிரச்சினைகள் இருப்பதாக நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இத்தாலியில் அமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கலாசார மையத்திற்கு ஷரியா சட்டம் அமுலில் உள்ள சவுதி அரேபியா நிதி அளித்துள்ளது.
ஐரோப்பாவின் கலாச்சார செயல்முறைக்கும், இஸ்லாம் கலாச்சார செயல்முறைக்கும் இடையே நீண்ட தொலைவு இருப்பதாகவும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பேசியுள்ளார்.