Paristamil Navigation Paristamil advert login

காசா மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் - 1000 பேரை சிறைப்பிடித்த இஸ்ரேல்

காசா மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் - 1000 பேரை சிறைப்பிடித்த இஸ்ரேல்

18 மார்கழி 2023 திங்கள் 08:52 | பார்வைகள் : 5540


இஸ்ரேல் காசாவில் பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி ஆயிரம் பேரை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், இஸ்ரேல் தாக்குதலை சிறிதும் குறைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவில் காசாமீது மூர்க்கத்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியதுடன் 1000 பேரை இஸ்ரேல் சிறை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில்,

ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கைகளை தூக்கினால் நாங்கள் அவர்களை கைது செய்வோம்.

நாங்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தமாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்