சிறுவர்கள் தம்மோடு சேர்ந்து மது அருந்த அனுமதிக்கும் பிரஞ்சு பெற்றோர்கள்.
18 மார்கழி 2023 திங்கள் 10:03 | பார்வைகள் : 3881
புற்றுநோய்க்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் 'OpinionWay' அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், 70% சதவீதமான பிரஞ்சு பெரியவர்கள் சிறுவர்களை மது அருந்த அனுமதிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 வயதுக்கு குறைவானவர்கள் கொண்டாட்ட காலங்களில் தம்மோடு சேர்ந்து மது அருந்த அனுமதிப்பது தவறானது அல்ல என 46% சதவீதமான பெற்றோர்கள் கருதுவதாகவும், அவர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு எதிரில் நாளாந்தம் மது அருந்துவதுடன், விடுமுறை நாட்களில் பிள்ளைகளும் சிறிதளவில் மதுவை சுவைக்க அனுமதிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தள கேள்வி தாள் மூலம் 3225 பெற்றோர்களிடம், 18 வயதுக்கு மேற்பட்ட மது அருந்தும் 1528 இளையோரிடமும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக 'OpinionWay' அமைப்பு தெரிவித்துள்ளது.