Paristamil Navigation Paristamil advert login

தம்பலகாமத்தில் அடை மழை - வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்

தம்பலகாமத்தில் அடை மழை - வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்

18 மார்கழி 2023 திங்கள் 10:58 | பார்வைகள் : 6882


கனமழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் பல தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தொடர் அடை மழை காரணமாக முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா 1ம் குறுக்குத் தெரு  நீரில் மூழ்கியுள்ளதுடன் இவ் வீதி ஊடாக செல்ல முடியாதுள்ளதாக  மக்கள் தெரிவிக்கின்றனர். 

பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் இவ் வீதியையே பயன்படுத்தி வருகின்றதுடன்  வெள்ள நீரை வெளியேற்ற ஏதாவது முறையான திட்டமொன்றை மேற்கொள்ளுமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு சிராட்டிகுளம் கிராம மக்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் 67 குடும்பங்களை சேர்ந்த 197 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிராட்டிகுளம் கிராம குதியில் பறங்கியாறு பெருக்கெடுத்த நிலையில் மக்கள் எவ்வித வெளித்தொடர்புகளின்றி பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்