Paristamil Navigation Paristamil advert login

பாடசாலைகளில் இடம்பெறும் துன்புறுத்தல்களை தடுக்க - புதிய வகுப்புகள்!!

பாடசாலைகளில் இடம்பெறும் துன்புறுத்தல்களை தடுக்க - புதிய வகுப்புகள்!!

18 மார்கழி 2023 திங்கள் 11:16 | பார்வைகள் : 2774


பாடசாலைகளில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் (Harcèlement ) தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சில சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சர் Gabriel Attal , இது தொடர்பான சில தகவல்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். பாடசாலைகளில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் இடம்பெற உள்ளது. முதல் கட்டமாக 1,000 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு வாரத்துக்கு இரண்டு மணிநேர வகுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாணவர்கள் பாடசாலைகளிலும், சமூகத்திலும் துன்புறுத்தல்கள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருப்பது தொடர்பில் அவசியம் அறிந்துவைத்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த வகுப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்