கர்ப்பகாலத்தின் அரம்பங்கில் பெண்களுக்கு ஏற்படும் குமட்டல் (சத்தி) ஏற்பட காரணம் என்?
18 மார்கழி 2023 திங்கள் 11:19 | பார்வைகள் : 3189
பெண்களுக்கு கர்காலத்தில் எற்படும் குமட்டலை (சத்தி) மருத்துவ உலகம் GDF-15 என்று அழைக்கும் அதேவேளை, இந்த குமட்டல் எந்த நேரத்திலும் ஏற்பட்டாலும் ('Morning sickness')
அதனை 'காலை நோய்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த குமட்டல் எற்பட காரணம், என்ன என்பதை பிரான்ஸ் மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. மனிதர்களுக்கு சாதாரணமாக சிறுநீர்ப்பை, சிறுநீரக உறுப்புக்களில் உற்பத்தியாகு GDF-15 எனும் மருத்துவ பெயர் கொண்ட ஒருவகை வேதியியல் பொருள், கர்ப்ப காலத்தில் கருவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தாயின் உடல் முழுவதும் பரவுகிறது, குறித்த புரதத்தின் அளவு உடலில் அதிகரிக்க அதற்கு எதிரான உடலின் போராட்டமே குறித்த குமட்டல் என அறியப்பட்டுள்ளது.
இது உண்மையான துன்பம் நிறைந்த நாட்கள். இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு நீரிழப்பு, சாப்பிட இயலாமை, பலவீனம் போன்றவை ஏற்படும். மற்றும் நிற்காத வாந்தியெடுப்பின் விளைவுகளுக்கு மருத்துவமனையில் அனுமதிப்பது கூட தேவைப்படலாம், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது, என்னவென்றால், கர்ப்பத்திற்கு முன்பே இந்த ஹார்மோனுக்கு பெண்கள் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். என்று, ஆனால் அந்த அதிசய சிகிச்சை இன்னும் பரீட்சார்த்தத்தில் உள்ளது. இருப்பினும் இந்த குமட்டல் தாய்க்கோ, சேய்க்கோ ஆபத்தானது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.