Paristamil Navigation Paristamil advert login

அஜித் பைக் பயணம் ஆவணப்படமாக வெளியாகுமா?!

அஜித் பைக் பயணம் ஆவணப்படமாக வெளியாகுமா?!

18 மார்கழி 2023 திங்கள் 12:21 | பார்வைகள் : 1708


நடிகர் அஜித்தின் பைக் டூர் ஆவணப்படமாக வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக வெளியாகி உள்ள தகவல், அஜித் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

நடிகர் அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து, அடுத்தக் கட்டப் படப்பிடிப்பிற்காக அஜித், த்ரிஷா மற்றும் படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜான் கிளம்பி சென்ற புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு, நடிகர் அஜித் ஜெர்மனி, டென்மார்க், நார்வே என உலகின் பல இடங்களில் பைக் பயணம் மேற்கொண்டார். இதுமட்டுமல்லாது, ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிந்ததும் உலக பைக் சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளார்.

சமீபத்தில் ‘ஏகே மோட்டோ ரைட்’ என்ற பைக் சுற்றுலா கம்பெனியை ஆரம்பித்துள்ள நடிகர் அஜித், இந்தியா மட்டுமல்லாமல் உலகில் இருக்கும் பிரமிக்கவைக்கும் பல இடங்களைப் பார்க்க பைக் சுற்றுலா செல்பவர்களுக்காகவே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், இப்படி பயணம் செய்பவர்களுடன் அஜித்தும் பைக்கில் பயணப்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அஜித் நேபாள், பூடான், ஜம்மு காஷ்மிர், கேதர்நாத் என இந்தியாவின் முக்கிய இடங்களில் பைக் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். இதை ஒவ்வொரு கட்டமாகத் திட்டமிட்டு முடித்தார். இப்படி இந்தியா முழுவதும் அஜித் பைக் சுற்றுலா சென்றுள்ள பயணம் தற்போது ஆவணப்படமாக வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அஜித்தின் மோட்டார் பைக் பயணத்தை, பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா காட்சிப்படுத்தியுள்ளார். படங்கள், வீடியோக்கள், பிரமிக்க வைக்கும் சாகசங்கள் என எல்லாமே கனகச்சிதமாக எடிட் செய்யப்பட்டு தயாராக இருக்கிறது என்கிறார்கள். அஜித் யெஸ் சொன்னால், விரைவில் அஜித்தின் சாகச மோட்டார் பைக் பயணங்கள் ஆவணப்படமாக வெளியாகும் என்கின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்