Paristamil Navigation Paristamil advert login

உலர் பழங்களை தினமும் சாப்பிட்டலாமா?

உலர் பழங்களை தினமும் சாப்பிட்டலாமா?

18 மார்கழி 2023 திங்கள் 12:29 | பார்வைகள் : 2176


உலர் பழங்களில் அதிகமான கலோரிகள் இருக்கும். இதை சாப்பிடுவதால் உங்கள் உடல் எடை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவது போல, எவ்வளவுதான் உலர் பழங்களில் சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அதை அளவாகவே சாப்பிட வேண்டும். இயற்கையாகவே உலர் பழங்களில் நிறைய சர்க்கரை இருக்கும். ஆகையால் இதை அதிகமாக சாப்பிடும் போது உங்கள் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பலவிதமான உலர் பழங்களை சாப்பிடும் போது உங்கள் உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துக்களும் ஆண்டி ஆக்சிடெண்டுகளும் கிடைக்கின்றன. டயட் கட்டுப்பாடு அல்லது அலர்ஜி இருப்பவர்கள் உலர் பழங்களை தவிர்ப்பது நல்லது. உலர் பழங்களை சாப்பிடுவதால் உங்கள் உடல் வித்தியாசமாக ரியாக்ட் செய்கிறதா என்பதை கவனமாக பாருங்கள். அடிக்கடி உலர் பழங்கள் சாப்பிடும் சில நபர்களுக்கு செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

* தினமும் கால் கப் உலர் பழங்கள் சாப்பிட்டால் போதும்.

* உங்களுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டுமென்றால் டயட்டில் உலர் பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

* சர்க்கரை சேர்க்கபடாத உலர் பழங்களை சாப்பிடுங்கள்.

* உலர் பழங்கள் சாப்பிட்டதும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, அதிகமாக தண்ணீர் பருகுங்கள்.

* பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் புரொட்டீன் ஆகியவை கொண்ட சரிவிகித டயட்டில் உலர் பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்