Paristamil Navigation Paristamil advert login

மணிகண்டன் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் டோலிவுட் நாயகி..

மணிகண்டன் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் டோலிவுட் நாயகி..

18 மார்கழி 2023 திங்கள் 12:43 | பார்வைகள் : 1613


ஜெய்பீம்’ உட்பட சில படங்களில் அசத்தலான கேரக்டரில் நடித்து வந்த மணிகண்டன் முதன்முதலாக ’குட் நைட்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து அவர் தற்போது ’லவ்வர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் பிரபு வியாஸ் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக கௌரி பிரியா நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது என்பதும் இந்த படம் வரும் காதலர் தினத்தில் இந்த ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணிகண்டன் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்து உள்ளது. மணிகண்டனின் அடுத்த படத்தை ராஜேஷ்வர் காளிசாமி என்பவர் இயக்க இருப்பதாகவும் யூடியூபில் பிரபலமான இவர் முதன் முதலாக திரைப்பட இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பிரபல டோலிவுட் நடிகை சான்வி மேக்னா என்பவர் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இதுதான் இவரது முதல் தமிழ் படம் என்றும் கூறப்படுகிறது.

காமெடி மற்றும் குடும்ப என்டர்டெயின்மெண்ட் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் உள்பட சிலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்