Paristamil Navigation Paristamil advert login

Clichy-sous-Bois, Drancy : துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!!

Clichy-sous-Bois, Drancy : துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!!

18 மார்கழி 2023 திங்கள் 15:33 | பார்வைகள் : 9016


Clichy-sous-Bois மற்றும் Drancy (Seine-Saint-Denis) நகரங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

முதலாவது சம்பவம் Allée Pierre-et-Marie-Curie வீதியில் உள்ள வீடொன்றின் அருகே இரவு 10.15 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. 16 வயதுடைய சிறுவன் ஒருவர் துப்பாக்கிச்சுட்டுக்கு இலக்காகி கண்கள் மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்துள்ளார். ஆயுததாரி தப்பி ஓடியுள்ளார். சிறுவன் பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Rothschild மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், நள்ளிரவு 12.30 மணி அளவில் Bondy நகரில் உள்ள Jean-Verdier மருத்துவமனைக்கு நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் வருகை தந்தார். அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதுடன், காவல்துறையினரால் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டார்.

குறித்த நபர மகிழுந்து ஒன்றில் அழைத்து வந்து சில மர்ம நபர்கள் இறக்கிவிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் Drancy நகரில் வைத்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதாக தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்