Paristamil Navigation Paristamil advert login

சீரற்ற காலநிலை - முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை - முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளுக்கு விடுமுறை

19 மார்கழி 2023 செவ்வாய் 02:50 | பார்வைகள் : 6885


நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 1,586 குடும்பங்களைச் சேர்ந்த 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பாடசாலை மாணவர்களின பாடசாலைக்கு வருகைதரும் விகிதமும் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களில் 341 குடும்பங்களைச் சேர்ந்த 1,039 பேர் 7 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 பாடசாலைகளை இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 3 பாடசாலைகளதும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5 பாடசாலைகளதும் கற்பித்தல் செயற்பாடுகள் இன்றைய தினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்