Paristamil Navigation Paristamil advert login

'தளபதி 68' படத்தின் தலைப்பு இதுவா?

'தளபதி 68' படத்தின் தலைப்பு  இதுவா?

19 மார்கழி 2023 செவ்வாய் 06:25 | பார்வைகள் : 1375


தளபதி விஜய் நடித்து வரும் 68வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாகவும் அடுத்த கட்டமாக வெளிநாட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்திற்காக மூன்று டைட்டிலை பரிசீலனை செய்து வைத்திருப்பதாகவும் அதில் ’பாஸ்’ என்ற டைட்டில் இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பது மட்டுமின்றி அனைத்து மொழிகளுக்கும் இந்த டைட்டில் ஆக பொருந்தும் வகையில் இருப்பதால் அந்த டைட்டிலை வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ’தளபதி 68 ’திரைப்படத்தில் டைட்டில் ’பாஸ்’ தானா என்பதை வரும் புத்தாண்டு வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் ஒரு வருடம் 19 வயது கெட்டப்பில் இருக்கும் வேடம் என்றும் இதற்காக புதிய டெக்னாலஜியை இயக்குனர் வெங்கட் பிரபு பயன்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் குறித்த செய்திகள் பெரும் ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்