வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல காத்திருக்கும் கனேடியர்களுக்கு பயண ஆலோசனைகள்

19 மார்கழி 2023 செவ்வாய் 09:12 | பார்வைகள் : 7791
கனடாவில் விடுமுறை நாட்களில் கனேடியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
அவர்களுக்காக, கனடா அரசு சில பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
சில நாடுகளில் குற்றச்செயல்கள், தீவிரவாத அச்சுறுத்தல், அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக, அங்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு கனடா அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அவ்வாறு பயணிக்கவேண்டாம் என கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ள 21 நாடுகள் பட்டியலில் ரஷ்யா, உக்ரைன், ஏமன், சூடான், சிரியா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் அடங்கும்.
தேவைப்பட்டாலொழிய சில நாடுகளுக்குச் செல்லவேண்டாம் என சில நாடுகள் குறித்து கனடா அரசு எச்சரிக்கிறது.
நைஜீரியா, எத்தியோப்பியா, காங்கோ குடியரசு, இஸ்ரேல், மேற்குக் கரை மற்றும் காசா ஆகிய இடங்கள் இந்த பட்டியலில் அடங்கும்.
மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்கவும் என 92 நாடுகள் குறித்து கனடா அரசு எச்சரித்துள்ளது.
பிரான்ஸ், எகிப்து, சீனா, தாய்லாந்து, பிரேசில், வியட்னாம் மற்றும் கியூபா முதலான நாடுகள் அந்த பட்டியலில் அடங்கும்.
அபாயங்கள் தொடர்பான எச்சரிக்கை மட்டுமின்றி, சில ஆலோசனைகளையும் சுற்றுலாப்பயணிகளுக்கு கனடா அரசு வழங்கியுள்ளது.
பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணிக்கும் நிலையில், உங்களுக்கு பயணக் காப்பீடு இருப்பதை உறுதி செய்துகொள்வது நன்று.
வெளிநாடுகளில் சிகிச்சைகள் எந்த அளவுக்கு செலவு பிடிக்குமோ தெரியாது. ஆகவே, முறையான மருத்துவக் காப்பீடு வைத்திருப்பது அவசியம்.
சில நாடுகளைக் குறித்து சரியாகத் தெரியாத பட்சத்தில், தகுதி பெற்ற பயண ஆலோசகர்களின் ஆலோசனையை நாடுவது சிறந்த விடயம்.
வெளிநாட்டு சுற்றுலா செல்வதற்கு முன், அது குறித்து கனடா அரசிடம் பதிவு செய்துகொள்வது நல்லது.
நீங்கள் செல்லும் நாட்டில் எதிர்பாராமல் பிரச்சினை எதுவும் வெடிக்கும் பட்சத்தில் நீங்கள் அங்கு இருப்பதை கனடா அரசு அறிந்துவைத்திருப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும் என ஆசாநனைகளையும் வழங்கியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1