ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பில் ஆர்வம் காட்டும் சுவிஸ் மக்கள்! ஆய்வு அறிக்கை
19 மார்கழி 2023 செவ்வாய் 09:17 | பார்வைகள் : 3418
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவிஸ் மக்கள் ஆர்வம் காட்டுவது சமீபத்திய ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, ஒரு வலிமையான அமைப்புடன் இணைந்திருக்கவேண்டும் என்றதொரு எண்ணம் பல நாடுகளுக்கு உருவாகி வருவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.
அதற்கு, கோவிட் காலகட்டத்தில் நாடுகள் சந்தித்த பொருளாதாரப் பிரச்சினைகள், போர் முதலான பல்வேறு விடயங்கள் காரணமாக பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, வர்த்தக நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பது சுவிட்சர்லாந்துக்கு அதிர்ஷ்டம் அல்லது நன்மையைக் கொண்டுவரும் என்று எண்ணுகின்றன.
சுவிட்சர்லாந்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றான சுவிஸ் மக்கள் கட்சி, ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிக்கும் ஒரு கட்சியாகும்.
ஆனாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பது அவசியம் என கருதுவது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
வெறும் 16 சதவிகிதத்தினர் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை எதிர்க்கிறார்கள்.
பெரும்பாலான சுவிஸ் பொதுமக்கள், சுவிட்சர்லாந்தின் பெரிய சந்தையை அணுகுவது அவசியம் என கருதும் நிலையில், அதற்காக, ஐரோப்பிய நீதிமன்றங்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுதல், சுவிட்சர்லாந்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களுக்கு சலுகைகள் வழங்குதல் முதலான சமரசங்கள் செய்து கொள்ளவும் 85 சதவிகிதம் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷ
அதாவது மக்கள்தான் தங்கள் நாட்டுக்கு எது அவசியம் என்பதை வாக்கெடுப்புகள் மூலம் முடிவு செய்கிறார்கள்.
ஆக, சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்கான வாக்கெடுப்புகள் விரைவில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.