Paristamil Navigation Paristamil advert login

Orly : ஐரோப்பாவில் அதிகளவான சேவைகள் பாதிக்கப்பட்ட விமான நிலையம்!

Orly : ஐரோப்பாவில் அதிகளவான சேவைகள் பாதிக்கப்பட்ட விமான நிலையம்!

19 மார்கழி 2023 செவ்வாய் 09:27 | பார்வைகள் : 2336


இவ்வருடத்தில் அதிகளவு சேவைகள் பாதிக்கப்பட்ட விமான நிலையமாக ஓர்லி சர்வதேச விமான நிலையம், ஐரோப்பிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

இவ்வருடத்தின் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 6 ஆம் திகதி வரை பிரெஞ்சு விமான நிலையங்களூடாக 605,000 விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் 10,500 சேவைகள் இறுதி நிமிடத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. இது திட்டமிடப்பட்ட மொத்த விமான சேவைகளில் 1.75% சதவீதமாகும். (சென்ற 2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1.11% சதவீதமாக இருந்தது) அவ்வாறு இரத்துச் செய்யப்பட்ட விமான சேவைகளில் பெரும்பான்மையானது ஓர்லி சர்வதேச விமான நிலையத்திலாகும்.

அதேவேளை, ஐரோப்பா அளவில் உள்ள விமான நிலையங்களிலும் அதிக விமான சேவைகளை இரத்துச் செய்த பெருமை ஓர்லி விமான நிலையத்துக்கே உள்ளது. 

**

இவ்வருடத்தில் பல்வேறு காரணங்களுக்காக ஓர்லி விமான நிலையத்தில் இருந்து சேவைகள் இரத்தாகியிருந்தன. அதில் மிக முக்கியமாக வெடிகுண்டு அச்சுறுத்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்