காஸாவில் குழந்தைகளுக்கு நேர்ந்த அவலநிலை! ஐ.நா கவலை

19 மார்கழி 2023 செவ்வாய் 09:35 | பார்வைகள் : 6005
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தீவிரமாக போர் இடம்பெற்றுவருகின்றது.
காசாவில் ஏராளமான குடும்பங்கள் பிளவடைந்துள்ளன எனவும், சுமார் 1 மில்லியன் குழந்தைகள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
அத்துடன் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் எனவும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
மேலும் உலகிலேயே குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக ‘காஸா‘ காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.