Paristamil Navigation Paristamil advert login

'கண்டுபிடியுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், செயல்படுங்கள்” காலாண்டு இதழ் வெளியானது.

'கண்டுபிடியுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், செயல்படுங்கள்” காலாண்டு இதழ் வெளியானது.

19 மார்கழி 2023 செவ்வாய் 10:01 | பார்வைகள் : 2378


'60 Millions Junior' எனும் தலைப்பில் எட்டு வயது முதல் பனிரெண்டு வயது வரையான சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்ட காலாண்டு நூல் கடந்த 7ம் திகதி பிரான்சில் வெளியாகியுள்ளது.

இந்த '60 Millions Junior'  நூலில் இந்த உலகில் அவர்களின் பங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்கள் ஆற்றவேண்டிய கடமை, உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றிய தெளிவு, அவர்கள் கண்டுபிடிக்க வேண்டிய வழிமுறைகள், கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள், அதனை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் என பல இளையோர் முன்னேற்றம் பற்றிய தகவல்கள் அந்த நூலில் அடங்கியுள்ளது.

"சமூக வலைப்பின்னல்களின் முதன்மைப் பயனாளர்களாக இளைஞர்கள், இவர்களை இலக்கு வைத்து பல விளம்பரங்கள் வேண்டாத விடையங்களை வேண்டியது போல் நம்பவைத்து அவர்களை அதற்கு அடிமையாக்குகிறது. இதனால் எங்களின் நூலில் விளம்பரங்கள் எது, தகவல்கள் எது, தேவைகள் எது, தேவையற்றது எது என்பது போன்ற விடயங்களை விளங்கவைத்து அவர்களை நல்வழிப் படுத்துவதே நோக்கம்" என நூல் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்