குடிவரவு சீர்திருத்தம் - இன்று இரவு 9 மணிக்கு வாக்கெடுப்பு!!
19 மார்கழி 2023 செவ்வாய் 10:03 | பார்வைகள் : 4579
குடிவரவு சீர்திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்தால் இன்று இரவு 9 மணிக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் அரச தரப்பு மிக நீண்ட சரமரச பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது. பெரும்பான்மையான ஆதரவு வாக்குகளைப் பெறும் நோக்கில் இந்த சமரச பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது. நேற்று திங்கட்கிழமை ஐந்து மணிநேரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், குடிவரவு சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், இன்று மாலை 7 மணிக்கு செனட் மேற்சபையில் வாக்கெடுக்கப்படும். அதன் பின்னர், பாராளுமன்றத்தில் இன்று இரவு 9 மணிக்கு ஆதரவு வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்தியினை படிக்க <<இங்கே>> அழுத்தவும்!