கருப்பைமாற்று சத்திரகிசிச்சைக்கு பின் குழந்தையை பெற்ற தாய் - மருத்துவ உலகில் புதிய சாதனை
19 மார்கழி 2023 செவ்வாய் 10:12 | பார்வைகள் : 2401
கருப்பை மாற்று சத்திரகிசிச்சை மூலம் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணொருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தனது தாயரின் கருப்பையை பெற்றுக்கொண்ட கேர்ஸ்டி பிரையன்ட் என்ற பெண்மணியே கருப்பை மாற்று சத்திரசிகிச்சையின் பின்னர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் இடம்பெற்ற 16 மணிநேர கருப்பை மாற்று சத்திரகிசிச்சை உலகினதும் மருத்துவ உலகினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
கருப்பை மாற்று சத்திரகிசிச்சை நிகழ்ந்து மூன்று மாதத்தின் பின்னர் கேர்ஸ்டி பிரையன்ட் கருத்தரித்தார்,
பிரையன்ட்டின் ஆண் குழந்தைக்கு ஹென்றி என பெயர் சூட்டியுள்ளனர்.
ஆரோக்கியமான அழுகையுடன் புதிய வரலாற்றை படைக்கின்றேன் என்ற உணர்வுடன் ஹென்றி பிறந்தான் என மருத்துவர் ரெபேக்கா டீன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது 25 வருட கூட்டு ஆராய்ச்சியின் பலாபலன் என தெரிவித்துள்ள மருத்துவர் சர்வதேச அளவில் விடாமுயற்சியின் உச்சக்கட்டம் இதன் காரணமாகவே அவுஸ்திரேலியாவில் இவ்வாறான முறையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது என தெரிவித்துள்ளார்.