Paristamil Navigation Paristamil advert login

யாழ்ப்பாணம் சென்ற விமானம் தரையிறக்க முடியாமல் தவிப்பு

யாழ்ப்பாணம் சென்ற விமானம் தரையிறக்க முடியாமல் தவிப்பு

19 மார்கழி 2023 செவ்வாய் 11:10 | பார்வைகள் : 4613


சீரற்ற காலநிலை காரணமாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணம்  சர்வதேச விமான நிலையம் சென்ற விமானம் தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் விமான நிலையத்தை பல முறை சுற்றிய விமானம் மீண்டும் சென்னை திரும்பியுள்ளது. 

குறித்த விமானம் இன்று 11.40 ற்கு தரையிறக்க வேண்டிய நிலையில் சீரற்ற வானிலை காரணமாக வானில் 30 நிமிடங்களுக்கு மேலாக பறந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் சென்னைக்கு திரும்பி சென்றதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

கடந்த சில தினங்களாக வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்