Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடு ஒன்றில் இளம் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இலங்கையர்

வெளிநாடு ஒன்றில் இளம் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இலங்கையர்

19 மார்கழி 2023 செவ்வாய் 15:07 | பார்வைகள் : 4803


அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த சமையல்காரர் மீது  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் இன்று (19) செய்தி வெளியிட்டுள்ளன.

கன்பரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையலறைக் களஞ்சிய அறையில் இளம் பெண்ணான சக ஊழியரைக்  கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான ஜூட் விஜேசிங்க திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இவரது உடம்பில் சில காயங்கள் காணப்பட்டதாகவும் அவை அவராலேயே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை எனவும்  தெரிய வந்துள்ளது.

பலியானவர் 29 வயதான பூட்டான் நாட்டவர்  என தெரிய வந்துள்ளது. விஜேசிங்க மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை  பொலிஸார் செவ்வாய்க்கிழமை  உறுதிப்படுத்தினர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்