யாழில். போதைப்பொருளுடன் சென்றவர்களை காட்டிக்கொடுத்த நாய்

20 மார்கழி 2023 புதன் 02:45 | பார்வைகள் : 5080
யாழ்ப்பாணத்தில் வீதியில் போதைப்பொருளுடன் சென்ற இருவரை பொலிஸாரின் மோப்ப நாய் காட்டி கொடுத்தமையால் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் சிறு தொகை போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், திங்கட்கிழமை பொலிஸார் மோப்ப நாய் சகிதம் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை , அவ்வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மறித்து சோதனையிட்ட போது ,அவர்களிடம் போதைப்பொருள் இருப்பதனை மோப்ப நாய் அடையாளம் காட்டியுள்ளது.
அதனை அடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1