Paristamil Navigation Paristamil advert login

பெரும் போராட்டத்துக்கு மத்தியில் - குடிவரவு சீர்திருத்தம் நிறைவேற்றம்!!

பெரும் போராட்டத்துக்கு மத்தியில் - குடிவரவு சீர்திருத்தம் நிறைவேற்றம்!!

20 மார்கழி 2023 புதன் 07:00 | பார்வைகள் : 4577


கடந்த ஒருவார காலமாக தலைப்புச் செய்தியாக இருந்த 'குடிவரவு சீர்திருத்தம்' (loi immigration) முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை செனட் சபையில் ஆதரவு வாக்குகள் பெறப்பட்டதை அடுத்து, பாராளுமன்றத்திலும் ஆதரவு வாக்குகள் பெறப்பட்டு சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 349 ஆதரவு வாக்குகளும், 186 எதிரான வாக்குகளும் பதிவாகி ஒருவழியாக சட்டம் நிறைவேற்றப்பட்டது. உள்துறை அமைச்சர் Gérald Darmanin இதனை வரவேற்று பதிவொன்றை வெளியிட்டார்.

முன்னதாக செனட் சபையில், 214 ஆதரவு வாக்குகளும், 114 எதிரான வாக்குகளும் பதிவாகியிருந்தது.

பிரதமர் Élisabeth Borne, இது தொடர்பாக தெரிவிக்கையில், "பெரும்பான்மை ஒன்றுபட்டது" என குறிப்பிட்டார்.

ஒருவாரத்துக்கு முன்பாக இந்த குடிவரவு சீர்திருத்தத்தை உள்துறை அமைச்சர் Gérald Darmanin பாராளுமன்றத்தில் வாசித்திருந்த போது, பெரும்பான்மையான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

***

இந்த குடிவரவு சட்டச் சீர்திருத்தமானது பிரான்சில் குடியேறும் அகதிகள் மற்றும் குடியேற்றவாதிகளுக்கான சட்டமாகும். அவர்களது ஆவணங்களை விரைவாக ஆராய்வது, கொடுப்பனவுகள் கொடுப்பது, சட்ட ஒழுங்கை மீறி செயற்படுவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது உள்ளிட்ட செயல்களை அனுமதிக்கிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்