கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த நபர்
20 மார்கழி 2023 புதன் 08:09 | பார்வைகள் : 7021
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் உள்ள ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றவர் மீது ரயில் மோதியுள்ளது.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவரைக் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவர் முன்னதாகவே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan