Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ட்ரம்புக்கு தடை விதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ட்ரம்புக்கு தடை விதிப்பு

20 மார்கழி 2023 புதன் 09:06 | பார்வைகள் : 5233


2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி அன்று அமெரிக்க தலைநகர் மீது அவரது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் அவருக்கு பங்கு இருப்பதன் காரணமாக கொலராடோவில் போட்டியிட முடியாது என்றும் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்