Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை போன டாப் 5 வீரர்கள்

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை போன டாப் 5 வீரர்கள்

20 மார்கழி 2023 புதன் 09:22 | பார்வைகள் : 2524


2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளின் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

உலகின் நம்பர் 1 டி20 தொடரான ஐபிஎல்-லின் 2024ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்றது.

இதில் 10 அணிகளை சேர்ந்த நிர்வாக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் ஏடுத்தனர்.

ஒவ்வொரு அணியின் அதிகபட்சமாக 25 வீரர்களை எடுக்க வேண்டும், அவற்றில் 8 வீரர்கள் அதிகபட்சமாக வெளிநாட்டு வீரர்களாக இருக்க வேண்டும்.

இந்த மினி ஏலத்தில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 31 கோடியே 35 லட்சம் ரூபாயை செலவழித்துள்ளது.

இதையடுத்து வரிசையாக சன்ரைசர்ஸ் அணி 30 கோடியே 80 லட்சம், சென்னை 30 கோடியே 40 லட்சம், குஜராத் 30 கோடியே 30 லட்சம், மும்பை 16 கோடி 70 லட்சம் ரூபாய், டெல்லி 19 கோடியே 5 லட்சம் ரூபாய், லக்னோ 12 கோடியே 20 லட்சம் ரூபாய்.

பஞ்சாப் 24 கோடியே 95 லட்சம் ரூபாய், பெங்களூர் 20 கோடியே 40 லட்சம் ரூபாய், ராஜஸ்தான் 14 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் உருவெடுத்துள்ளார்.

அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுமார் 24 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. அவரை தொடர்ந்து மற்றொரு அவுஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ் 20 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

3வது இடத்தில் நியூசிலாந்து வீரர் பேரல் மிச்சல் சுமார் 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

4வதாக பஞ்சாப் அணி ஹர்ஷல் பட்டேலை 11 கோடியே 75 லட்சத்திற்கும், 5வதாக அல்சாரி ஜோசப்பை 11 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பெங்களூர் அணியும் வாங்கியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்