அர்ஜென்டினாவில் பலத்த புயல்காற்று... அடித்து செல்லப்பட்ட விமானம்....
20 மார்கழி 2023 புதன் 09:46 | பார்வைகள் : 8401
அர்ஜென்டினாவில் உள்ள விமான நிலையத்தில் பலத்த காற்று வீசியதில் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் அடித்து தள்ளப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சுமார் 150 கிமீ வேகத்தில் காற்று வீசியது.
அர்ஜென்டினாவில் கடும் புயல் வீசியது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Buenos Aires அருகே உள்ள Aeroparque Jorge Newbery விமான நிலையத்தின் விமான நிறுத்துமிடத்தில் தனியார் விமானம் ஒன்று காற்றின் வேகத்தால் பக்கவாட்டில் நகர்ந்தது.
பலத்த காற்று வீசியதால் விமானம் ஓடுபாதையில் நின்று சுழன்றது. அதே ஓடுபாதையில் போர்டிங் படிகளும் பக்கவாட்டில் சாய்ந்தன.
அர்ஜென்டினாவில் காற்று பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 14 பேர் உயிரிழந்தனர். பல வீடுகள் இடிந்தன. அனைத்து இடங்களிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Bahía Blanca நகரில், பலத்த காற்றினால் ரோலர் ஸ்கேட்டிங் வளையம் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர்.
Bahía Blancaஐ அர்ஜென்டினாவின் ஜனாதிபதி Javier Miele பார்வையிட்டார்.
விமானம் கவிழ்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

























Bons Plans
Annuaire
Scan