சர்வதேச மனித ஒற்றுமை தினம் இன்று...
20 மார்கழி 2023 புதன் 10:12 | பார்வைகள் : 2106
நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் என்பது மக்கள் மற்றும் பூமியை மையமாகக் கொண்டது. மேலும் உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது.
வறுமை, பசி மற்றும் நிலையான வளர்ச்சி, நல்வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள புதிய முயற்சிகளை வகுப்பதில் இந்த நாள் கவனம் செலுத்துகிறது.
டிசம்பர் 20, 2002 அன்று ஐக்கிய நாடுகள் பொது சபையால் உலகளாவிய வறுமையை போக்க உலக ஒற்றுமை நிதியம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது பெப்ரவரி 2003-ல் ஐநா வளர்ச்சித் திட்டத்தின் அறக்கட்டளை நிதியின் ஒரு பகுதியாக மாறியது. அதன் நோக்கம் வறுமையை ஒழிப்பது மற்றும் வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் ஏழ்மையான பிரிவுகளில் மனித மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதாகும்.
22 டிசம்பர் 2005 அன்று, பொதுச்சபை தீர்மானத்தின் மூலம், 21-ஆம் நூற்றாண்டில் மக்களிடையே உள்ள உறவுகளுக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய அடிப்படை மற்றும் உலகளாவிய மதிப்புகளில் ஒன்றாக ஒற்றுமையை அடையாளம் கண்டது, இதனை தொடர்ந்து உலகில் உள்ள பல கலாச்சாரங்களில் சமத்துவம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்வதில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை மக்கள் மற்றும் நாடுகளுக்கு வலியுறுத்த டிசம்பர் 20-ம் தேதியை சர்வதேச மனித ஒற்றுமை தினமாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA).
சர்வதேச மனித ஒற்றுமை தினம் என்பது வேற்றுமையில் நமது ஒற்றுமையைக் கொண்டாடும் நாளாகும். சர்வதேச உடன்படிக்கைகளுக்கு தங்கள் கடமைகளை மதிக்க அரசாங்கங்களுக்கு நினைவூட்டும் நாளாக இருக்கிறது. ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இந்நாளில்.
சர்வதேச மனித ஒற்றுமை தினத்தின் கருப்பொருள் என்பது வளரும் நாடுகளில் கலாச்சார சமத்துவம், மனித மற்றும் சமூக மேம்பாட்டையும், நீதியையும் மேம்படுத்துவதை மையமாக கொண்டதாகும்.
நன்றி மாலை மலர்