Paristamil Navigation Paristamil advert login

வெப்பநிலை செட் செய்யும் Xiaomi Smart Electric Blanket..

வெப்பநிலை செட் செய்யும் Xiaomi Smart Electric Blanket..

20 மார்கழி 2023 புதன் 10:21 | பார்வைகள் : 2426


சியோமி (Xiaomi) நிறுவனம் சியோமி மிஜியா ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ப்ளாங்கெட் (Xiaomi Mijia Smart Electric Blanket) என்ற போர்வையை அறிமுகம் செய்துள்ளது.

குளிர்காலங்களில் வெப்பநிலையை சமாளிக்க சியோமி (Xiaomi) நிறுவனம் மக்களுக்கு ஏற்றவகையில் ஸ்மார்ட் படுக்கை விரிப்பை (Smart Blanket) அறிமுகம் செய்துள்ளது.

சியோமி மிஜியா ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ப்ளாங்கெட் (Xiaomi Mijia Smart Electric Blanket) என்று அழைக்கபடும் போர்வை 140W பவர் மூலம் இயக்கப்படும். இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட போர்வையில், தனித்தனியாக வெப்பநிலையை செட் செய்துகொள்ளலாம்.

ஆனால், நம்மில் பலருக்கும் எலக்ட்ரிக் பிளாங்கெட்டை பயன்படுத்துவதற்கு சிறிது அச்சம் இருக்கும். இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதில் மூன்று அடுக்கு இன்சுலேஷன் (Insulation) அமைக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையை கண்டறியும் இயல்பு (over-temperature)
ஷாட் சர்க்யூட் (short circuit)
ஓவர்லோட் (overload)
ஓவர் கரண்ட் (overcurrent)
லைட்டனிங் ஸ்ட்ரைக் (lightning strike)
சைல்டு லாக் (child lock protection)
வாய்ஸ் கண்ட்ரோல் (Voice control)
6 லெவல் வெப்பநிலை அமைப்பு (six levels of temperature adjustment)
கிருமிகளை அகற்றுவது, ட்ரையிங் மோட் (removal/drying mode)
ஹேண்ட் கண்ட்ரோல் (digital hand control)

ஆட்டொமெடிக் ஸ்டான்பை மோடில் (Automatic Standby mode) இந்த பிளாங்கெட் 15 மணிநேரம் செயல்படும். இதன் ஹீட்டிங் வயரானது 25000 மடங்கு வளையும். முக்கியமாக, இந்த ப்ளாங்கெட்டை வாஷிங் மெஷினில் கூட சலவை செய்யலாம்.

மிஜியா ஆப் மூலம் சியோமி ஸ்மார்ட் டிவைஸ்களுடன் இணைத்து Smart Electric Blanket -யை கண்ட்ரோல் செய்ய முடியும்.

இந்த ப்ளாங்கெட் 32 டொலருக்கு (சுமார் ரூ. 2600) விற்பனை செய்யப்படும். ஆனால், டிசம்பர் 20 முதல் 27 வரை 27 டொலருக்கு (ரூ. 2200) இதனை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவுக்கு இது விரைவில் வரும்.       

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்