Burkina Faso : நான்கு பிரெஞ்சு நபர்கள் கைது!

20 மார்கழி 2023 புதன் 10:34 | பார்வைகள் : 9311
பிரான்சுடன் தனது நட்பை முறித்துக்கொண்ட ஆப்பிரிக நாடுகளில் ஒன்றான Burkina Faso வில் நான்கு பிரெஞ்சு நபர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பர்கினா ஃபசோவின் தலைநகரான Ouagadougou இல் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு சமூக பணியில் ஈடுபட்டிருந்த நால்வரும் அந்நாட்டு உளவுத்துறை (DGSE) டிசம்பர் மாத ஆரம்பத்தில் கைது செய்து, விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
”குறித்த நான்கு நபர்களின் களப்பணியை சரிபார்த்து வருகிறோம். அவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கிறது.
கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை சேகரித்த பிரான்ஸ், அவர்கள் கணனி பழுதுகளை திருத்தும் பணியில் ஈடுபடுபவர்கள் எனவும், அவர்களை தாமதமின்றி விடுதலை செய்து பிரான்சுக்கு திருப்பு அனுப்ப வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியதாகவும் இராஜதந்திர ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025