Paristamil Navigation Paristamil advert login

பாதுகாப்பு காரணங்களுக்காக வெர்சாய் மாளிகை வெளியேற்றம்!!

பாதுகாப்பு காரணங்களுக்காக வெர்சாய் மாளிகை வெளியேற்றம்!!

20 மார்கழி 2023 புதன் 11:27 | பார்வைகள் : 8008


இன்று புதன்கிழமை காலை வெர்சாய் மாளிகை, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டது. கிட்டத்தட்ட 2,000 பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இன்று டிசம்பர் 20 ஆம் திகதி, காலை இந்த வெளியேற்றம் இடம்பெற்றது. பின்னர், காவல்துறையினர் சில தேடுதல் பணிகளை மேற்கொண்டனர்.

"பாதுகாப்பு காரணங்களுக்காக, வெர்சாய்ஸ் அரண்மனை பார்வையாளர்களை வெளியேற்றுகிறது மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டவுடன் மீண்டும் திறக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி." என அவர்களது சமூகவலைத்தள கணக்கில் பகிர்ந்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை வெர்சாய் மாளிகை ஏழு தடவைகள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**

சற்று முன்னர், வெர்சாய் மாளிகை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்