Paristamil Navigation Paristamil advert login

உருளைக்கிழங்கு பொடிமாஸ்

உருளைக்கிழங்கு பொடிமாஸ்

20 மார்கழி 2023 புதன் 11:47 | பார்வைகள் : 2300


வேகவச்சஉருளைகிழங்கு பிடிக்காத குழந்தைகள் நிறைய பேர் இருப்பாங்க. வாங்க எப்படி சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்யலாம்அப்படின்னு பார்க்கலாம் 

தேவையான பொருட்கள் 

1/4 கிலோ உருளைக்கிழங்கு 
3 வெங்காயம் 
1 பச்சை மிளகாய் 
4 காய்ந்த மிளகாய் 
1 ஸ்பூன் சீரகம் 
1 ஸ்பூன் தனியா விதைகள் 
1 கப் தேங்காய் துருவல் 
1 கொத்து கறிவேப்பிலை 
எண்ணெய் தேவையான அளவு 
உப்பு தேவையான அளவு 

செய்முறை 

 முதலில் உருளைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு கழுவி உருளைக்கிழங்கை துருவி எடுத்துக் கொள்ளவும்.  துருவிய உருளைக்கிழங்கில் உப்பு சேர்த்து பிசறி எடுத்துதனியாக வைத்து விடவும். 

 பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு கொஞ்சம் கூடுதலாக எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.   

 வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் துருவி வைத்துள்ள உருளைக்கிழங்கை பிழிந்து விட்டு நீரை எடுத்த பிறகு வெறும் உருளைக்கிழங்குதுருவலை மட்டும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். 

உருளைக்கிழங்கு வதங்கி கொண்டிருக்கும் பொழுதே வேறு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் காய்ந்த மிளகாய், சீரகம், தனியா விதைகளை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

வறுத்தெடுத்துள்ள பொருட்கள் ஆறிய பிறகு அவைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்குவெந்த பிறகு அதில் பொடித்து வைத்துள்ள மிளகாய் , சீரக, தனியா பொடியை சேர்த்து நன்றாககிளறி விடவும். 

 வெந்த பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து விட்டுஇறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்