புதிய குடிவரவு சட்டம்! - வெளிநாட்டவர்களுக்கு ஆபத்தா? - அரச பேச்சாளர் பதில்!!
20 மார்கழி 2023 புதன் 12:33 | பார்வைகள் : 9935
பிரான்சில் குடியேறும் வெளிநாட்டவர்கள் மீது மிக கடுமையான சட்டங்கள் கொண்ட குடிவரவு சட்ட சீர்திருத்தம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
’இறுக்கமான சட்டம்’ என தெரிவிக்கப்படும் இந்த புதிய திருத்தத்தம் குறித்த பல அச்சம் மக்களிடையே பரவி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டவர்கள் பிரான்சில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என கருத்துகள் பரவி வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக அரச பேச்சாளர் Olivier Véran இன்று தெரிவிக்கையில், ”பிரான்சில் புதிதாக குடியேற்றப்படமாட்டார்கள் எனும் செய்தி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாட்டவர்களிடம். ஆனால் அது உண்மையில்லை. வெளிநாட்டவர்கள் வரவேற்கப்படுவார்கள்.” என தெரிவித்தார்.
”இந்த சட்டம் இன்னும் எமது கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது!” எனவும் அவர் தெரிவித்தார்.
**
எவ்வாறாயினும், இந்த புதிய சட்டமானது வெளிநாட்டு குடியேறிகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அச்சுறுத்தலான வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் இந்த சட்டம் பணிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.