யூத வெறுப்பு செயற்பாடுகள் குறித்து கனடிய பிரதமர் அச்சம்
20 மார்கழி 2023 புதன் 13:14 | பார்வைகள் : 3455
இஸ்ரேல நாடு காசா மீது பாரிய தாக்குதல்லை மேற்கொண்டு வருகின்றது.
இதனால் கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் பலஸ்தீனர்கள் யூத மக்களுக்கு எதிராக பல வன்முறை சம்வங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கனடாவில் யூத எதிர்ப்பு நடவடிக்கைள் குறித்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அச்சம் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் கனடாவின் ஒட்டாவாவ நகரில் 15 வயதான சிறுவனை பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
யூத சமூகத்தின் மீது தாக்குதல் நடத்த குறித்த சிறுவன் முயற்சித்தாக கனடிய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த சிறுவன் மீது வெடிபொருட்கள் தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய பகுதிகளில் போன்றே கனடாவிலும் யூத வெறுப்பு செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளமை அச்சமளிப்பதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கைதின் மூலம் யூத சமூகத்தினருக்கு நாட்டில் பாதுகாப்பு வழங்வதனை அரசாங்கம் உறுதி செய்வதில் கவனம் எடுத்துக் கொள்வது வெளிப்படையவதாக தெரிவித்துள்ளார்.
போராட்டம் செய்யும் உரிமைகளை மதிப்பதாகவும், வெளிநாடுகளில் இடம்பெறும் விவகாரங்களுக்கு கனடியர்கள் பொறுப்பு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடியப் பிரஜைகள் அனைவரையும் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.