APA கொடுப்பனவுகள் நிறுத்தம்! - குடிவரவு சட்டத்தினை பின்பற்ற மறுக்கும் 32 மாவட்டங்கள்! - சாத்தியமா..?!!
20 மார்கழி 2023 புதன் 17:13 | பார்வைகள் : 8869
குடிவரவு சட்டத்தில் சில இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சில புதிய கட்டுப்பாடுகளை செயற்படுத்த 32 வரையான மாவட்டங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. அவ்வாறு செயற்பட முடியுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
மேற்படி குடிவரவு சட்டத்தில் கொண்டுவரப்பட மாற்றத்தின் படி, நிபந்தனைகளுக்கு பொருந்தாத நபர்களின் கொடுப்பனவான l'allocation personnalisée d'autonomie (APA) இனை நிறுத்த இந்த புதிய சட்டம் பரிந்துரைக்கிறது. இந்த சட்டத்தினை செனட் சபை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்தோடு தற்போது இந்த மாற்றங்களை பிரெஞ்சு அரசியலமைப்புச் சபையின் (Conseil constitutionnel) மேற்பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், Var, Seine-Saint-Danis உள்ளிட்ட 32 வரையான மாவட்டங்கள் (குறிப்பாக இடது சாரி மாவட்டங்கள்) இந்த கொடுப்பனவு நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
அவ்வாறு செய்வது சட்டத்துக்கு ஏற்புடையதா என்பது விளக்கப்படவில்லை. இருந்தபோதும் குறித்த நகரங்களில் நகரசபைத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.