இலங்கையை விட்டு 1500 வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்
21 மார்கழி 2023 வியாழன் 03:19 | பார்வைகள் : 11864
1500-இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் முதல் இதுவரையான காலப்பகுதியில் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட 1500-இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்.
மேலும் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 40 சிறிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


























Bons Plans
Annuaire
Scan