ஜனாதிபதி நேர்காணல்! - முழுமையான தொகுப்பு!!
21 மார்கழி 2023 வியாழன் 08:38 | பார்வைகள் : 5664
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று இரவு தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி வழங்கியிருந்தார். குடிவரவு சட்டச் சீர்திருத்தம், மிஸ்.பிரான்ஸ், ஒலிம்பிக் உள்ளிட்ட ஏராளமான நடப்பு விடயங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
குடிவரவு!
மேம்படுத்தப்பட்ட குடிவரவுச் சட்டமானது ( loi immigration) நாட்டுக்கு மிகவும் பயனுள்ளது. நாம் எங்கு பின் தங்கி இருந்தோமோ, இப்போது அதற்கு கவசமாக மாறியுள்ளது. பிரான்சில் குடியேற்ற பிரச்சனை உள்ளது என்பது இனியில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார். மரீன் லு பென்னின் கட்சிக்கு கிடைத்த தோல்வி எனவும் விமர்சித்தார். தீவிர இடதுசாரியான அவர் மேற்படி குடிவரவு சட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தார்.
பாடசாலைகளில் துன்புறுத்தல்!
பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் இவ்வருடத்தில் பேசுபொருள் ஆகியிருந்தது. அது குறித்தும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார். ”பேரச்சம்’ எனும் வார்த்தையை பயன்படுத்திய ஜனாதிபதி, ‘மிக மோசமான நிலைக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்தார்.
மிஸ்.பிரான்ஸ் மீது விமர்சனம்!
2024 ஆம் ஆண்டுக்கான மிஸ்.பிரான்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Eve Gilles என்பவர் மீது பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஜனாதிபதி கண்டித்தார். “கட்டையான முடி இருப்பதால் மக்கள் வெறுப்பு உணர்வை திணிக்க முற்படுவது பைத்தியக்காரத்தனம்!” என தெரிவித்தார்.
மத்திய கிழக்கு!
மத்திய கிழக்கான இஸ்ரேலில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம் தொடர்பிலும் ஜனாதிபதி மக்ரோன் கருத்து வெளியிட்டார்.
”மக்கள் அனைவரும் சமம் எனும் கருத்தை அரபு கொண்டுள்ளதை நாம் அறிவோம். ஹமாஸ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டது. அது ஏற்க முடியாதது. ஏனென்றால் மக்கள் அனைவரும் சமம். அதேவேளை, இஸ்ரேலினையும் கண்டிக்க தவறவில்லை. “பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது என்பது, காஸாவை தரைமட்டமாக்குவதல்ல!” என குறிப்பிட்டார்.
பணவீக்கம்!
பணவீக்கம் விரைவில் முற்றுப்பெறும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எதிர்வு கூறினார். பொருட்களின் விலையேற்றம் அதிகரிப்பது தரிவிக்கப்படலாம். ஆனால் முன்னர் இருந்தது போன்ற விலை இனிமேல் இருக்காது எனவும் தெரிவித்தார். மக்களின் பொருட்களை வாங்கும் திறன் (pouvoir d'achat) மேம்படும் எனவும் மக்ரோன் தெரிவித்தார்.
ஒலிம்பிக்!
2024 ஆம் ஆண்டு இடம்பெற உள்ள கோடைகால விளையாட்டான ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், “திட்டம் B" எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அனைத்து திட்டமிடல்களும் தயாராக இருப்பதாகவும், எவ்வித தடையும் இன்றி ஒலிம்பிக் நிகழ்வின் அழகையும், கலையையும் கண்டு மகிழலாம்!” என தெரிவித்தார்.
⚫