Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்பம்

 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்பம்

21 மார்கழி 2023 வியாழன் 07:34 | பார்வைகள் : 6443


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்  மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. 
 
மாலைதீவு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. 

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறங்கியதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏர்பஸ் A-330 ரக விமானத்தில் 201 பயணிகள் பயணித்த நிலையில் கோளாறு ஏற்பட்டுள்ளது. 

விமானத்தில் பயணித்த பயணிகள் பிறிதொரு விமானம் மூலம் மாலைதீவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்