பொன்முடி வகித்து வந்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு

21 மார்கழி 2023 வியாழன் 07:59 | பார்வைகள் : 6508
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.எல்.ஏ பதவி காலியாக உள்ளது. இதனால் அமைச்சர் பொறுப்பும் தானாகவே பறிபோயுள்ளது.பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை பொறுப்பு அடுத்து யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்து.
இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025