Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு நடிகர் Gérard Depardieu மீது ஸ்பெயினைச் சேர்ந்த பெண் பாலியல் குற்றச்சாட்டு!

பிரெஞ்சு நடிகர் Gérard Depardieu மீது ஸ்பெயினைச் சேர்ந்த பெண் பாலியல் குற்றச்சாட்டு!

21 மார்கழி 2023 வியாழன் 08:31 | பார்வைகள் : 2406


பிரெஞ்சு நடிகர் Gérard Depardieu மீது ஸ்பெயினைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் ஊடகவியலாளராக பணிபுரியும் Ruth Baza எனும் 51 வயதுடைய பெண் ஒருவரே இந்த குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இந்த பாலியல் வல்லுறவு சம்பவம் 30 ஆண்டுகளுக்கு முன்னர், 1995 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார். நடிகர் Gérard Depardieu, 1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி அன்று அவரது சினிமா தயாரிப்பு நிறுவனமான Roissy Films வளாகத்தில் வைத்து தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவித்தார்.

அதன் போது தனத்துக் 23 வயது எனவும், Gérard Depardieu இற்கு 46 வயது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது தான் உடல் ஆற்றலற்று இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அவர் காவல்நிலையத்தில் புகார் எதையும் அளிக்கவில்லை. இச்செய்தியினை பர்சிலோனாவில் இருந்து வெளிவரும் La Vanguardia எனும் ஊடகம் முதன் முதலாக வெளியிட்டிருந்தது.

இச்சம்பவத்தை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட பிரான்சின் உயரிய Légion d'honneur விருதினை திருப்பி பெற வேண்டும் என கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்