Paristamil Navigation Paristamil advert login

‘Christmas Tree Cluster’ தோற்றத்தில் நட்சத்திரக்கூட்டம்: NASA வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்

‘Christmas Tree Cluster’ தோற்றத்தில் நட்சத்திரக்கூட்டம்: NASA வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்

21 மார்கழி 2023 வியாழன் 09:38 | பார்வைகள் : 1850


கிறிஸ்துமஸ் மரம் (Christmas Tree Cluster) போன்ற தோற்றத்தில் நட்சத்திரக்கூட்டங்களின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வரும் 25 -ம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 2,500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் கிறிஸ்துமஸ் மரம் போன்ற தோற்றத்தில் நட்சத்திரக் கூட்டத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரா கண்காணிப்பகம் படம் பிடித்துள்ளது.

பச்சை நிறத்தில் இருக்கும் இந்த விண்மீன் திரள்கள் சூரிய குடும்பத்துக்கு அடுத்தப்படியாக உள்ளன. இந்த புதிய விண்மீன் திரள்களுக்கு NGC 2264 என்று பெயரிடப்பட்டுள்து. இதற்கு 1 முதல் 5 கோடி ஆண்டுகள் வரை வயது இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நட்சத்திரங்களில் சில பூமியை விட சிறியதாகவும், சில பெரியதாகவும் உள்ளன. அதாவது, சில நட்சத்திரங்களின் எடை சூரியனின் எடையில் பத்தில் ஒரு பங்கிற்கு குறைவானதாகவும், ஒரு சில சூரியனின் எடையை விட ஏழு மடங்கு அதிகமாகவும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்