Paristamil Navigation Paristamil advert login

ஆபாச இணையதளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

 ஆபாச இணையதளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

21 மார்கழி 2023 வியாழன் 09:50 | பார்வைகள் : 2376


ஐரோப்பிய ஒன்றியம் (European Union) பிரபலமான ஆபாச தளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

டிஜிட்டல் சேவைகள் சட்டம் (DSA) எனப்படும் கடுமையான வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டிய மிகப் பாரிய ஓன்லைன் தளங்களின் பட்டியலில், ஐரோப்பிய இன்றியத்தில் மிகவும் பிரபலமான ஆபாச இணையதளங்களான Pornhub, Stripchat மற்றும் XVideos ஆகியவற்றை சேர்த்துள்ளது.

மூன்று தளங்களும் DSA கட்டுப்பாடுகளுக்கு கீழ் வரும் 45 மில்லியன் பயனர் வரம்பை கடந்துவிட்டன.

மூன்று ஆபாச தளங்களும் இப்போது பயனர்களின் வயதைச் சரிபார்க்கக்கூடிய அமைப்புகளைச் செயல்படுத்த  கடமைப்பட்டுள்ளது மற்றும் ஒப்புதல் இல்லாத வீடியோக்கள் போன்ற சட்டவிரோத உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஐரோப்பிய ஒன்றியம் ஆபாச இணையதளங்களின் வயது சரிபார்ப்பு மற்றும் உள்ளடக்கத்தை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்துவது போன்ற வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாகவே இந்த மூன்று ஆபாச இணையதளங்களை கட்டுப்பாட்டுக்கும் கொண்டுவரும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஓன்லைன் வெறுப்பு பேச்சு, இன அவதூறு மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய காரணங்களுக்காகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்தது.

DSA விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்ட நிறுவங்கள், அவற்றின் உலகளாவிய வருவாயில் 6% வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ஆகஸ்ட் முதல், இந்த விதிகள் Amazon, AliExpress, Apple, Microsoft, Google, Meta, Snapchat மற்றும் LinkedIn போன்ற நிறுவனங்களுக்கு பொருந்தும்.

கனடாவைச் சேர்ந்த Pornhub, ஜூலை 31 ஆம் திகதி நிலவரப்படி, 33 மில்லியன் சராசரி மாத பயனர்களைக் கொண்டிருப்பதாகக் கூறியது.

XVideos முன்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் 160 மில்லியன் பயன்பாடுகள் இருப்பதாக கூறியது. StripChat உலகளவில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்