உக்ரைன் நாட்டுக்கு வழங்கும் நிதி உதவியில் அதிகரிப்பு - சுவிட்சர்லாந்து
21 மார்கழி 2023 வியாழன் 09:54 | பார்வைகள் : 2623
உக்ரைனில் வாழும் மக்கள் குளிர்காலத்தில் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றார்கள்.
இவ்வாறு குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கு வசதியாக, உக்ரைனுக்கு வழங்கும் நிதி உதவியை சுவிட்சர்லாந்து அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்து, ஏற்கனவே உக்ரைனுக்கு 13 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
மேலும் 12 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை உக்ரைனுக்கு வழங்குவது என சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே சுவிட்சர்லாந்து வழங்கிய நிதி, 1,000 குடியிருப்புகளை பழுதுபார்க்க உதவியுள்ள நிலையில், மக்கள் குளிர்காலத்தை எதிர்கொள்ள வசதியாக, 1,300 வீடுகளுக்கு ஹீற்றர்களை வழங்க உள்ளது சுவிட்சர்லாந்து அரசு.
இதுபோக, சுவிஸ் மனிதநேய உதவி பிரிவும், குடிநீர் வழங்கும் அமைப்புகளை சரிசெய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.