சச்சினின் 14 ஆண்டு சாதனையை தகர்த்த வங்கதேச வீரர்
21 மார்கழி 2023 வியாழன் 10:13 | பார்வைகள் : 1747
வங்கதேச அணியின் துடுப்பாட்ட வீரர் சவுமியா சர்கார் இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி Saxton Oval மைதானத்தில் நடந்தது.
இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 291 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க வீரர் சவுமியா சர்கார் (Soumya Sarkar) 151 பந்துகளில் 169 ஓட்டங்கள் விளாசினார். இதில் 2 சிக்ஸர், 22 பவுண்டரிகள் அடங்கும்.
அதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 46.2 ஓவரில் 296 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹென்றி நிக்கோல்ஸ் 95 ஓட்டங்களும், வில் யங் 89 ஓட்டங்களும் விளாசினர்.
சவுமியா சர்கார் 169 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
அதாவது, ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரே இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்த துணை கண்ட வீரராக சச்சின் டெண்டுல்கர் (163) இருந்தார். அவரை தற்போது சவுமியா சர்கார் முந்தியுள்ளார்.
இந்தப் பட்டியலில் இலங்கையின் திசாரா பெரேராவும், லஹிரு திரிமன்னேவும் உள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த துணை கண்ட வீரர்கள்
சவுமியா சர்கார் (வங்கதேசம்) - 169
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 163*
திசாரா பெரேரா (இலங்கை) - 140
லஹிரு திரிமன்னே (இலங்கை) - 139*
மஹ்முதுல்லா (வங்கதேசம்) - 128*