இளையராஜாவை சந்தித்த இரஞ்சித்... காரணம் என்ன?

21 மார்கழி 2023 வியாழன் 10:32 | பார்வைகள் : 5854
இயக்குனர் பா ரஞ்சித் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் இளையராஜாவை சந்தித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் இந்த சந்திப்பின்போது அம்பேத்கர் அவர்களின் காதல் கடிதம் கொண்ட புத்தகத்தை பரிசாக அளித்ததாகவும் தெரிகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா ரஞ்சித். இவர் தற்போது விக்ரம் நடித்த ’தங்கலான்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் ரிலீஸை அடுத்து அவரது அடுத்த படம் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் இசைஞானி இளையராஜாவை பா ரஞ்சித் சந்தித்த புகைப்படம் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது அவர் பாபாசாகேப் அம்பேத்கார் தனது மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள் கொண்ட புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார்.
இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என கூறப்பட்டாலும் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக பணிபுரிய அதிக வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1