Paristamil Navigation Paristamil advert login

 அணுஆயுத ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவோம் - வடகொரியா அதிபர் 

 அணுஆயுத ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவோம் - வடகொரியா அதிபர் 

21 மார்கழி 2023 வியாழன் 11:18 | பார்வைகள் : 3899


அமெரிக்கா- தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகளின் போர் ஒத்திகை, கொரியா தீபகற்பத்தில் இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை ஆகியவை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வடகொரியா நினைக்கிறது.

இதனால் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. 

சமீபத்தில் அணுஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் "ஹ்வாசோங்-18" ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. 

இது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையாக பார்க்கப்படுகிறது.

வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் ஒரு பகுதியை துல்லியமாக இலக்கு நிர்ணயித்து தாக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

அதேவேளையில் கடந்த ஆண்டில் இருந்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணுஆயுத ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவோம் என தொடர்ந்து எச்சரித்து வருகிறார். 

ஆனால் வடகொரியா செயல்படும் அணுசக்தி ஏவுகணைகளை பெறவில்லை. 

முதலில் அணுஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில், வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளால் தாக்கப்பட்டிருக்கிறது என வெளிநாட்டு வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கடந்த ஐந்து மாதங்களில் முதன்முறையாக திங்கட்கிழமை ஏவுகணை சோதனை நடத்தி, அமெரிக்கா- தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் தூண்டப்பட்டால் எதிரிகள் மீது அணுஆயுத தாக்குதலை நடத்த தயங்கமாட்டோம் என்பதுதான் எங்களது கொள்கை என கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

 மேலும், ஹ்வாசோங்-18 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதால், அதில் ஈடுபட்டவர்களை பாராட்டியுள்ளார்.

வடகொரியா கடந்த ஆண்டு அணு ஆயுதம் பயன்படுத்தும் வகையிலான சட்ட திருத்தம் கொண்டு வந்தது. 

 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைக சோதனை நடத்தியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அணுஆயுதங்கள் சுமந்து சென்று தாக்குதல் நடத்துபவையாகும்.

அணுஆயுதங்களை பயன்படுத்துவதின் முடிவு கிம் ஜாங் உன் அரசு முடிவுக்கு வருவதாக இருக்கும் என அமெரிக்கா மற்றும் தென்கொரியா தொடர்ந்து எச்கரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்