கணவன் VS மனைவி: காதல் கல்யாணம் எப்போது கசக்கும்? எப்படி சரி செய்யலாம்?
21 மார்கழி 2023 வியாழன் 11:28 | பார்வைகள் : 1794
காதல் வாழ்வில் இருக்கும் சுகமும் திருமண வாழ்க்கையில் இல்லாமல் போவது ஏன்? திருமண வாழ்க்கையினை ஆயுள் முழுக்க அழகாக்குவது எப்படி என்று மனோதத்துவ நிபுணர்கள் தரும் விளக்கம் தான் இந்த பதிவு.
பொதுவாக ஆண் பெண் இருவரும் காதலிக்கும் போது
"அன்பே இருவரும்
பொடிநடையாக அமெரிக்காவை
வலம் வருவோம் கடல்மேல் சிவப்புக்
கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்"
என சந்தோஷமாக இருக்கும் காட்சி, திருமணத்திற்கு பிறகு வாழ்வே மாயம் என சோகம் கீதம் இசைப்பதாக காதல் திருமணம் செய்த பல ஜோடிகளின் புலம்பலாக உள்ளது.
காதல் வாழ்வில் இருக்கும் சுகமும் திருமண வாழ்க்கையில் இல்லாமல் போவது ஏன்? திருமண வாழ்க்கையினை ஆயுள் முழுக்க அழகாக்குவது எப்படி என்று மனோதத்துவ நிபுணர்கள் தரும் விளக்கம் தான் இந்த பதிவு.
முதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் இல்லற வாழ்வு கசக்க தொடங்கிவிட்டது என்று அர்த்தம்
அலுவலகம் முடிந்து வந்ததும் உங்கள் வாழ்க்கை துணைக்கான நேரத்தை ஒதுக்காமல் இருப்பது
கடும் கோபத்தில் உங்கள் வாழ்க்கை துணைவரை திட்டி தீர்த்த பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்கமால் இருப்பது அல்லது மன்னிப்பு கேட்க மறந்துவிடுவது.
வீட்டிற்கு செல்லும் ஆர்வம் குறைவது
உங்கள் துணைவர் ஆசையாக சமைத்து கொடுக்கும் உணவு குறித்து எந்த விமர்சனமும் செய்யாமல் இருப்பது
உங்கள் குழந்தைகளுடன் அழகான தருணங்களை மிஸ் செய்வதாக நீங்கள் மனதிற்குள் அழுதால் உங்களின் இல்லற வாழ்வு கசந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்